Friday, December 18, 2015

Vivadha Medai | Debate On Jallikattu

Vivadha Medai | Debate On Jallikattu Controversy | Dt 17-12-15 | Sun News

https://www.youtube.com/watch?v=CSDpgIdgCYQ

Vivadha Medai | SC's Verdict On Appointment Of Priests

Vivadha Medai | SC's Verdict On Appointment Of Priests As Per Agama | Dt 16-12-15 | Sun News

ஆகம விதிகள் படியே கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்படவேண்டும்- உச்ச நீதி மன்றம் - விவாத மேடையில்

https://www.youtube.com/watch?v=LOsqVVeOVU8

Thursday, March 12, 2015


ஒரு நாள்  தான் மகளிர் தினமா ?

தாயாகி மண்ணாகி மொழியாகி
சேயின் கருவாகி உயிரானவளே !
நீரின்றி அமையாது உலகு !
நீயின்றியும் அமையாது உலகு !




பெண்ணில்லாத ஆணும் இல்லை
பெண்ணில்லாத மண்ணும் இல்லை !
 நீ இல்லாத கவிதையும் இல்லை
காவியங்கள் எதுவும் எழுதப்படவில்லை !


எதிர்த்து வரும் புலிக்கு
உன் முறம் போதும்
அடம் பிடிக்கும்  குழந்தைக்கு
உன் முத்தம் போதும் !

நிலவில்  கால் நீட்டி வடை சுட்டவள் 
நீ இருக்கும் போது !
முதலில் கால் பதித்தவன் நானென்று
ஆம்ஸ்ட்ராங் மார் தட்டிக்கொள்ள முடியாது !

பண்பின் பாசத்தின் முகவரியே !
அன்பின் அமைதியின் முழுமதியே ! -நீ
அமைதிப்படையில் இருந்திருந்தால்
இலங்கையில் இனப்படு கொலையே நடந்திருக்காது !





ஒவ்வொரு ஆணுக்கும் தெரியும் - உன்
தியாகமும் வலிமையும்
யார் கண்ணுக்கும் தெரியாது - உன்
வலியும் வேதனையும்

ஒவ்வொரு நாளும் கொண்டாடவேண்டியவள் நீ
உன் தியாகங்களுக்கு ஒரு நாள்  தான் மகளிர் தினமா ?

Dr.R.RENGARAJ
SUN NEWS

Tuesday, March 18, 2008

ஆறு வ‌ழிக‌ள்

கையில் நூறு ரூபாய் வைத்து அதற்குள் செலவிடச்சொன்னால் நம்மில் பலரும் தோற்றுவிடுவோம்.அதில் வெற்றிபெற சில தகவல்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

1)மாதச்சம்பளம் வந்ததுமே அதில் பத்து சதவிகிதத்தை சேமியுங்கள். உங்களது சம்பளம் பத்தாயிரம் என்றால் அதில் ஆயிரம் ரூபாய் போக வருமானமே ஒன்பதாயிரம் தான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதனை வங்கியில், அஞ்சலகத்தில், மியூச்சுவல் பண்ட் என ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம்.

2)மாத‌ ப‌ட்ஜெட்டில் வாட‌கை, ம‌ளிகை, அத்தியாவ‌சிய‌ப்பொருட்க‌ள் த‌விர‌, ஆரோக்கிய‌ம், காப்பீடு,சுகாதார‌ம், புதிய‌ விச‌ய‌ங்க‌ள் க‌ற்ப‌த‌ற்கு என தொகையை ஒதுக்குங்க‌ள்.

3)மாத செல‌வுக‌ளை இவ்வ‌ள‌வு தான் என்று ப‌ட்ஜெட் போட்டு வைத்து அத‌ன் ப‌டி செல‌வு செய்யுங்க‌ள். கூடுத‌லாக‌ச் செல‌வு வ‌ந்தால் அதைச் ச‌மாளிக்க‌ கூடுத‌லாக‌ உழையுங்க‌ள். வ‌ருமான‌ம் பாருங்க‌ள்.அதை உங்க‌ள‌து குழ‌ந்தைக்கும் சொல்லிக்கொடுங்க‌ள்.

4)கிரெடிட் கார்டில் மாட்டிக்கொண்டு பலரும் அலைகிறோம். வருமானம் வருவதற்கு முன்பே செலவு செய்துவிடுகிறோம். அதற்குப்பதிலாக, வீட்டுக்குத்தேவைப்படும் மாத மளிகைப் பொருட்களை கிரெடிட் கார்ட் மூலம் வாங்குகள். இன்ஷுரன்ஸ் போன்றவற்றை கிரெடிட் கார்ட் மூலமே செலுத்துங்கள். இதனால் அந்தக்கார்ட் மூலம் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அத்துடன் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை மாதச்செலவுகளாகவே பாவித்து எப்போதும் போல சம்பளப்பணத்தில் எடுத்துக் கொடுத்து விடலாம்.கிரெடிட் கார்ட் மதிப்பும்(தொகையும்) அதிகரிக்கும்.

5)இன்ஷூர‌ன்ஸ் பாலிசிக்கு செலுத்த‌ வேண்டிய‌ பிரீமிய‌த்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும்ப‌டியாக‌ வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌த்தொகையை உங்க‌ள‌து ச‌ம்ப‌ள‌ப்ப‌ண‌த்தில் இருந்து மாதாமாத‌ம் எடுத்து வங்கியில் ஒருவ‌ருட‌ ரெக்க‌ரிங் டெப்பாசிட்டாக‌ப் போட்டு வாருங்க‌ள். அதில் கிடைக்கும் ஒரு சிறிய‌ வ‌ட்டித்தொகையும் கிடைக்கும். செலுத்தும் பிரீமிய‌த்தில் ஐந்து ச‌த‌விகித‌ டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

6)வீட்டுக்கு வாட‌கையாக‌ கொடுப்ப‌தை விட‌ லீஸூக்கு பார்க்க‌லாம். மிச்ச‌ப்ப‌டும் ‌ வாட‌கைப்ப‌ண‌த்தை மியூச்சுவ‌ல் ப‌ண்டில் எஸ்.ஐ.பி முறையில் முத‌லீடாக‌ச்செய்து பெருக்கலாம்.

ம‌னித‌ன் த‌ன‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ வேலையை மட்டும் செய்கிறான். புத்திசாலியோ அதில் வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்கிறான்.எல்லா இட‌த்திலும் வாய்ப்புக‌ள் உண்டு.

ஆர்.ஆர்