Thursday, March 12, 2015
ஒரு நாள் தான் மகளிர் தினமா ?
தாயாகி மண்ணாகி மொழியாகி
சேயின் கருவாகி உயிரானவளே !
நீரின்றி அமையாது உலகு !
நீயின்றியும் அமையாது உலகு !
பெண்ணில்லாத ஆணும் இல்லை
பெண்ணில்லாத மண்ணும் இல்லை !
நீ இல்லாத கவிதையும் இல்லை
காவியங்கள் எதுவும் எழுதப்படவில்லை !
எதிர்த்து வரும் புலிக்கு
உன் முறம் போதும்
அடம் பிடிக்கும் குழந்தைக்கு
உன் முத்தம் போதும் !
நிலவில் கால் நீட்டி வடை சுட்டவள்
நீ இருக்கும் போது !
முதலில் கால் பதித்தவன் நானென்று
ஆம்ஸ்ட்ராங் மார் தட்டிக்கொள்ள முடியாது !
பண்பின் பாசத்தின் முகவரியே !
அன்பின் அமைதியின் முழுமதியே ! -நீ
அமைதிப்படையில் இருந்திருந்தால்
இலங்கையில் இனப்படு கொலையே நடந்திருக்காது !
ஒவ்வொரு ஆணுக்கும் தெரியும் - உன்
தியாகமும் வலிமையும்
யார் கண்ணுக்கும் தெரியாது - உன்
வலியும் வேதனையும்
ஒவ்வொரு நாளும் கொண்டாடவேண்டியவள் நீ
உன் தியாகங்களுக்கு ஒரு நாள் தான் மகளிர் தினமா ?
Dr.R.RENGARAJ
SUN NEWS
Subscribe to:
Comments (Atom)