Tuesday, March 18, 2008

ஆறு வ‌ழிக‌ள்

கையில் நூறு ரூபாய் வைத்து அதற்குள் செலவிடச்சொன்னால் நம்மில் பலரும் தோற்றுவிடுவோம்.அதில் வெற்றிபெற சில தகவல்களை உங்களுக்குச் சொல்கிறேன்.

1)மாதச்சம்பளம் வந்ததுமே அதில் பத்து சதவிகிதத்தை சேமியுங்கள். உங்களது சம்பளம் பத்தாயிரம் என்றால் அதில் ஆயிரம் ரூபாய் போக வருமானமே ஒன்பதாயிரம் தான் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதனை வங்கியில், அஞ்சலகத்தில், மியூச்சுவல் பண்ட் என ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம்.

2)மாத‌ ப‌ட்ஜெட்டில் வாட‌கை, ம‌ளிகை, அத்தியாவ‌சிய‌ப்பொருட்க‌ள் த‌விர‌, ஆரோக்கிய‌ம், காப்பீடு,சுகாதார‌ம், புதிய‌ விச‌ய‌ங்க‌ள் க‌ற்ப‌த‌ற்கு என தொகையை ஒதுக்குங்க‌ள்.

3)மாத செல‌வுக‌ளை இவ்வ‌ள‌வு தான் என்று ப‌ட்ஜெட் போட்டு வைத்து அத‌ன் ப‌டி செல‌வு செய்யுங்க‌ள். கூடுத‌லாக‌ச் செல‌வு வ‌ந்தால் அதைச் ச‌மாளிக்க‌ கூடுத‌லாக‌ உழையுங்க‌ள். வ‌ருமான‌ம் பாருங்க‌ள்.அதை உங்க‌ள‌து குழ‌ந்தைக்கும் சொல்லிக்கொடுங்க‌ள்.

4)கிரெடிட் கார்டில் மாட்டிக்கொண்டு பலரும் அலைகிறோம். வருமானம் வருவதற்கு முன்பே செலவு செய்துவிடுகிறோம். அதற்குப்பதிலாக, வீட்டுக்குத்தேவைப்படும் மாத மளிகைப் பொருட்களை கிரெடிட் கார்ட் மூலம் வாங்குகள். இன்ஷுரன்ஸ் போன்றவற்றை கிரெடிட் கார்ட் மூலமே செலுத்துங்கள். இதனால் அந்தக்கார்ட் மூலம் டிஸ்கவுண்ட் கிடைக்கும். அத்துடன் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையை மாதச்செலவுகளாகவே பாவித்து எப்போதும் போல சம்பளப்பணத்தில் எடுத்துக் கொடுத்து விடலாம்.கிரெடிட் கார்ட் மதிப்பும்(தொகையும்) அதிகரிக்கும்.

5)இன்ஷூர‌ன்ஸ் பாலிசிக்கு செலுத்த‌ வேண்டிய‌ பிரீமிய‌த்தை ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும்ப‌டியாக‌ வைத்துக் கொள்ளுங்க‌ள். அந்த‌த்தொகையை உங்க‌ள‌து ச‌ம்ப‌ள‌ப்ப‌ண‌த்தில் இருந்து மாதாமாத‌ம் எடுத்து வங்கியில் ஒருவ‌ருட‌ ரெக்க‌ரிங் டெப்பாசிட்டாக‌ப் போட்டு வாருங்க‌ள். அதில் கிடைக்கும் ஒரு சிறிய‌ வ‌ட்டித்தொகையும் கிடைக்கும். செலுத்தும் பிரீமிய‌த்தில் ஐந்து ச‌த‌விகித‌ டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

6)வீட்டுக்கு வாட‌கையாக‌ கொடுப்ப‌தை விட‌ லீஸூக்கு பார்க்க‌லாம். மிச்ச‌ப்ப‌டும் ‌ வாட‌கைப்ப‌ண‌த்தை மியூச்சுவ‌ல் ப‌ண்டில் எஸ்.ஐ.பி முறையில் முத‌லீடாக‌ச்செய்து பெருக்கலாம்.

ம‌னித‌ன் த‌ன‌க்கு இட‌ப்ப‌ட்ட‌ வேலையை மட்டும் செய்கிறான். புத்திசாலியோ அதில் வாய்ப்புக‌ளை உருவாக்கிக் கொள்கிறான்.எல்லா இட‌த்திலும் வாய்ப்புக‌ள் உண்டு.

ஆர்.ஆர்

5 comments:

ரெங்கா... said...

Quote of the Day
Speculation is an effort, probably unsuccessful, to turn a little money into a lot. Investment is an effort, which should be successful, to prevent a lot of money from becoming a little. - Fred Schwed Jr., in 'Where Are The Customer’s Yachts?' (1940)

ரெங்கா... said...

Quote of the Day
Speculation is an effort, probably unsuccessful, to turn a little money into a lot. Investment is an effort, which should be successful, to prevent a lot of money from becoming a little. - Fred Schwed Jr., in 'Where Are The Customer’s Yachts?' (1940)

ரெங்கா... said...

Quote of the Day
Money is flat and meant to be piled up.- Scottish Proverb

ரெங்கா... said...

ஆடு புலி ஆட்டம்

புள்ளிகளில் விளையாடும்
மில்லியன் டாலர் லூட்டி‍ இது
காளைக்கும் கரடிக்குமான
கயிறு இழுக்கும் போட்டி

காளை முட்டி தூக்கினால்
கையில் காசு பார்க்கலாம்
கரடி சுற்றி தாக்கினால்
காசும் லாஸ் ஆகலாம்

ஆயில் விலை ஏறினால்
ஆடிப்போகும் சந்தை
அந்நியர் நிலை மாறினால்
கலங்கிவிடும் மந்தை

என்ன சொல்லி ஏறுமோ
எதைச் சொல்லி இறங்குமோ
பதைபதைக்குது நெஞ்சு
பணம் காற்றில்பறக்கும் பஞ்சு

கையில் காசிருந்தால்
ருசிக்கும் இந்த ஆட்டம்
கடன் வாங்கிப் போட்டிருந்தால்
கசந்துவிடும் சூதாட்டம்.

ரெங்கராஜ்.

ரெங்கா... said...

ஒரே முறைதான் விரும்பினேன்
உட‌னே வந்து அனண‌த்துக்கொண்டாய்
உச்சிமுக‌ர்ந்து வ‌ர‌வேற்றேன்
வான‌மே கைக்குள் வ‌ச‌ப்ப‌ட்ட‌தாய்
விர‌ல்க‌ளில் வ‌ருடி முத்த‌மிட்டேன்

உன்னை
உரசிக்கொள்ளும் ஒவ்வொரு நிமிடமும்
உற்சாகமாய்க் கழிகிறது

உல்லாச ஹோட்டல்கள்
உற்ச்சாக‌ பார்கள்...
உன்னோடு ஊர்சுற்றிய இடங்கள்
கொஞ்சமல்ல நஞ்சமல்ல...


காஞ்சிபுரம் பட்டு
கை நிறைய வளையல் என
உன் உரசலில் விட்ட தொகையும்
கொஞ்சம்ல்ல ந‌ஞ்ச‌ம‌ல்ல‌...

மோக‌ம் முப்ப‌து நாள்
ஆசை அறுப‌து நாளென்று
அப்போது தான் தெரிந்த‌து‍ என்
முடிவில்லாத‌ ஆசைக்கு
பில் போட்டு லாப‌ம் பார்த்த‌து

ம‌ளிகைக்கடைக்குச்செல்லும் என்
மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் உன்
ம‌டியில் க‌ரைந்த‌து
க‌ட‌ன்ப‌ட்ட‌ என்நெஞ்ச‌ம்
க‌த‌றியே அழுகிற‌து

ஒரு நிமிட‌ ச‌ப‌ல‌த்தில்
தொலைந்தே போனது என்ம‌கிழ்ச்சி..


கிற‌ங்க‌டித்த‌ என் கிரெடிட் கார்டே...
உன்னை
உர‌சி உர‌சியே ஓய்ந்துபோனேன்...
வ‌ட்டி
கட்டி க‌ட்டியே மாய்ந்துபோனேன்...


ஆர்.ரெங்க‌ராஜ்.